ஒடிசாவை மிரட்டும் ‘தித்லி’ புயல்: 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒடிசா:

த்திய வங்க கடலில் ஏற்பட்டுள்ள  ‘தித்லி’ புயல் ஒடிசாவில் கடற்கரை மாவட்டங்களை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக  ஒடிசா மாநிலத்தில் கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களில்  அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

‘தித்லி’ புயல்

மத்திய வங்க கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு மண்டம் புயலாக மாறி உள்ளது. இந்த  புயலுக்கு ‘தித்லி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது  இந்த புயல், ஆந்திர- ஒடிஷா கடற்கரையோரமாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆந்திராவின் சில பகுதிகள் மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தற்போது இந்த புயல் ஒடிஷாவின் கோபால்பூருக்கு 560 கி.மீ தொலை விலும், ஆந்திராவின் கலிங்கப் பட்டினத்திற்கு 510 கி.மீ தொலை விலும் மையம் கொண்டுள்ளது.  இது மேலும் வலுவடைந்து   ஆந்திரா-ஒடிஷா இடையே நாளை கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இ

தனால், இந்த இரு மாநிலத்திலும் மீன் பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஒடிசா மாநிலத்தில்  4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.