திமுக செய்தித்தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் நீக்கம் – க. அன்பழகன்

திமுக செய்தித்தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

tks

திமுக சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் என க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ. அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் இன்று வெளியிட்டது.

இந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.