’’பா.ஜ.க.வும், திரினாமூல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’’ காங்கிரஸ் விளாசல்..

’’பா.ஜ.க.வும், திரினாமூல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’’ காங்கிரஸ் விளாசல்..

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க.வும், முதல்வர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மே.வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர பிரசாத்’’ கட்சி மாறிகளை ஊக்குவிக்கும் கலையில் பா.ஜ.க.வும், திரினாமூல் காங்கிரஸ் கட்சியும் மாஸ்டர் பட்டம் பெற்றவை ‘’ என குற்றம் சாட்டினார்.

‘’ இரண்டு கட்சிகளும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் கட்சிகள்’’ என குறிப்பிட்ட அவர்’’ அவை இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ‘’ என விமர்சித்தார்.

‘’மே.வங்க மாநிலத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் காங்கிரசுக்கு எந்த தயக்கமும் இல்லை’’ என குறிப்பிட்ட ஜிதேந்திர பிரசாத்’’இரு கட்சிகளும் இணைந்து மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து அடிமட்ட அளவில் போராட்டம் நடத்தி உள்ளன’’ என்றார்.

‘’ மே.வங்க மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வியப்பூட்டும் வகையில் இருக்கும்’’ என அவர் மேலும் தெரிவித்தார்.

-பா.பாரதி.