த.மா.கா. காமெடி: போராட்டத்துக்கு முன்பே கைது போஸ்டர்!

தஞ்சை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துக்கட்சி சார்பில்  நேற்றும் இன்றும்  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது அல்லவா?

சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

14657453_672754436224229_6564082232973137133_n

தஞ்சாவூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் அவர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பே   தஞ்சையில் ஜி.கே.வாசன் கைது என்று  போஸ்டர் ரெடிபண்ணி நகர் முழுதும் ஒட்டிவிட்டனர்  த.மா.கா.வினர்.

“கூட்டணி முடிவையோ, தொகுத பங்கீட்டையோ கூட தேர்தலுக்கு மிக நெருக்கத்தில்தான் அறிவிப்பார் த.மா.கா. தலைவர் ஜி.கேவாசன். ஆனால் அவரது தொண்டர்கள் இம்புட்ட்டு ஸ்பீடா இருக்காங்களே” என்று கிண்டலாக சிரிக்கிறார்கள் தஞ்சைவாசிகள்.