கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில், ஆட்சி தக்க வைத்துக்கொள்ள மம்தாவும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. எம்எல்ஏக்கள், முக்கிய தலைவர்களை பாஜக வளைத்து வருகிறத. இதுவரை, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் மற்றுமொரு எம்பி சமீபத்தில் அக்கட்சி
யிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ திடீரென விலகி பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 திரிணாமுல் கட்சியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜிதேந்திர திவாரி. இவர் நேற்று ஸ்ரீரம்பூர் என்ற மாவட்டத்தில் நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் என்பவர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது  மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மேலும் சில எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயற்சித்து வருவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது