சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த கோரியும், கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே  வரும் 6ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிகே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய மருத்துவர்கள், மருத்துவமனைகளில் இருப்பதில்லை எனவும், டெங்குவை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாகவும் கூறி உள்ளார்.

மேலும், எண்ணை  நிறுவனங்கள் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு தினசரி பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி வருகிறது. எண்ணை விலையை ஒரே சிரான நிலைத்த தன்மையோடு நிர்ணயம் செய்யவும், கலால் வரியை ரத்து செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பிரச்சனைகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காணும் விதமாக, நாளை மறுநாள் (6ந்தேதி)  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு  ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.