சேலை பரிசளித்தார்: கொல்கத்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடி மனைவியுடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு!

கொல்கத்தா:

ன்று மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னும் திடீரென சந்தித்துக்கொண்டனர்.

பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருபவர் மம்தா பானர்ஜி. ஆனால், மம்தா தனக்கு வருடத்துக்கு ஒருமுறை  சட்டை மற்றும் வங்காள இனிப்புக்கள் அனுப்புவார் என பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது, விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னும் வந்திருந்தார்.

அவரைக்கண்ட மம்தா, அவரிடம் நலம் விசாரித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டதுடன் இனிப்பு பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது மம்தா பானர்ஜி, யசோதா பென்னுக்கு சேலை பரிசளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.