இந்த வாரம் மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

மிஷ்கின் இயக்கிய சைக்கோ, சேரன் நடித்த ராஜாவுக்கு செக், வைபவ் நடித்துள்ள டாணா என மூன்று படங்களும் நாளை வெளியாகவுள்ளன.

இந்த மூன்று படங்களில் சைக்கோ படம் முதல் மூன்று நாள்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், ராம் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படம் நாளை ரிலீசாகிறது.

‘ராஜாவுக்கு செக்’ படம் எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ளது , ‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கியவேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.

நோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சி.கலைமாமணி தயாரித்துள்ள திரைப்படம் ‘டாணா’. வைபவ் கதாநாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி. யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிவா.ஜி.ஆர்.என். ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.