சென்னை:

மிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாளை முதல் 10, 11, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், பொதுத்தேர்வு ஏழுதும் 10, 11, +2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இணைய வசதி இல்லாதவர்கள், நாளை பிற்பகல் முதல் பள்ளிதலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.