12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஏப்ரல் 24ல் வெளியாகும் வெளியாகும் – பள்ளிக் கல்வித்துறை

மிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைப்படி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் இதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 4ல் தொடங்கிய 11 ஆம் வகுப்புத் தேர்வுகள் 26 வரை நடைபெற உள்ளது.

மாணவர்கள் பயன்பெறும் வகையில்  விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. 12 விடைத்தாள்கள் ஏப்ரல் 1 தொடங்கி 13 ஆம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 அன்று வெளியிடப்படும். மேலும் 11 வகுப்பு விடைதாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 15ல் தொடங்கி, 25க்குள் முடிக்கப்பட்டு மே14ல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதுகுறித்து மேலும் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஆண்டுவரை மொழிப்பாடங்களின் விடைத்தாள்களே முதலில் திருத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் அனைத்துப் பாடத் தாள்களும் திருத்தும் பணி ஒரே நேரத்தில் தொடங்கப்படும். விடைதாள் திருத்தும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். முறையான அனுமதியின்றி மையங்களுக்குள் எவரும் நுழையாதபடி சிசிடிவி கேமிராவால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் மற்றும் பிற அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகச் சிறந்த அளவில் வசதிகள் செய்து தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.