மன்னார்குடி,

ரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின்ர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வறட்சி காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சி காரணமாக வும், தற்கொலை செய்தும் மரணமடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அரசு தண்ணீர் தராமல் வஞ்சித்ததாலும் பயிரிடப்பட்ட சம்பா, குருவை பயிர்கள் கருகி வருகின்றன. இதை பார்க்கும் விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்து வருகின்றனர். பலர் மரணத்தை தழுவி உள்ளனர்.

இதுகுறித்து,  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது,

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சி, தற்கொலை மரணங்களால் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து தற்கொலை மரணங்களை தடுத்து நிறுத்திடும் வகையில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்.

மேலும்,  கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

தமிழக அரசின் மவுனத்தால் விவசாயிகள் நிலை குலைந்துள்ளனர்.

எனவே,  தமிழக அரசு வறட்சி நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கிடவும், மத்திய அரசு தேவையான நிதியை விடுவிக்கவும் வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளோம்.

போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து பங்கேற்க வேண்டும் என, தமிழக அனைத்துக்கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு அவர்  கூறினார்.

அதைத்தொடர்ந்து இன்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்டார்.