ஜல்லிக்கட்டுக்கு தமிழக நடிகர் சங்கமும் ஆதரவு!

சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது.

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சிம்பு தனது ஆதரவை முதன்முதலாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, விஜய் மற்றும் நடிகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆர்ஜே.பாலாஜி, மயில்சாமி, மன்சூர் அலிகான், மியூசிக் டைரக்டர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் களத்தில் இறங்கி போராடினர்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்குறித்து மூத்த திரைப்பட கலைஞர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், டைரக்டர் சுப்புராஜ் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்து உள்ளது.

ஒருசிலர் மாறுப்பட்ட கருத்துக்களை கூறிவந்த நிலையில், தமிழக இளைஞர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலையை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் சங்கம் சார்பாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி