தமிழக அரசின் வழக்கறிஞர், கூடுதல் வழக்கறிஞர் திடீர் ராஜினாமா!

சென்னை:

மிழக அரசின் வழக்கறிஞர் டி.என்.ராஜகோபாலன் மற்றும்  கூடுதல் வழக்கறிஞர் மணிஷ்சங்கர் திடீரென தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் டி.என்.ராஜகோபாலன் பணியாற்றி வந்தார். அதுபோல கூடுதல் வழக்கறிஞராக மனிஷ்குமார் பதவி வகித்து வந்தார். இவர்கள் இருவரும் இன்று தங்களது பணிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்து மீண்டும் சேர்ந்ததும் கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம்  நடைபெற்றது. அப்போது அட்வகேட் ஜெனரல் பதவிக்கு 9 வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி  கடந்த ஆண்டு டிசம்பர் 23ந்தேதி  புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, வி.எஸ். சேதுராமன், பி. எச். அரவிந்த் பாண்டியன், சி. மணிஷ் சங்கர், எஸ்.டி.எஸ். மூர்த்தி, நர்மதா சம்பத், எஸ். ஆர். ராஜகோபால் ஆகியோரும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராக, வழக்கறிஞர்கள் செல்லபாண்டியன், பி. புகழேந்தி ஆகியோரும், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் பிரசாத் என ஒன்பது பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது அரசு டி.என்.ராஜகோபாலன் மற்றும்  கூடுதல் வழக்கறிஞர் மணிஷ் சங்கர் திடீரென தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். அவர்கள் தங்கள்  ராஜினாமா கடிதத்தை அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.