சென்னை

கொரோனா தடுப்பூசி அளிக்க வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசைத் தமிழக வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசிகள் போடும் பணி விரைவில் தொடங்க உள்ளது.   இதற்காக கொரோனா பரவலுக்கு எதிராகக் களத்தில் உள்ள தொழில் வல்லுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.  இதற்கான பட்டியல் தற்போது மத்திய மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த பட்டியலில் வழக்கறிஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தமிழக வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இந்த சங்கத்தின் தலைவர் பிரபாகரன் இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், செயலர், புதுச்சேரி முதல்வர், ஆளுந்ஃஅர் உள்ளிட்ட பலருக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக பொது மக்களுடன் தொடர்பில் உள்ளதால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.,

ஆகவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக கொரோனாவுக்கு எதிராக செயல்படும் தொழில் வல்லுநர்களாக வழக்கறிஞர்களையும் அறிவிக்க வேண்டும் எனவும் அத்துடன் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பட்டியலில் இவர்களை இணைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளைப்பட்டுள்ளது.   இந்த பட்டியல் தயாரிக்கத் தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.