கோவை

மிழக வேளாண்மை பல்கலைக்கழகம் 10 இளம் அறிவியல் பட்டப் படிப்புக்களுக்கும் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்துள்ளது.

தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் கோவையில் இயங்கி வருகிறது.  இந்த பல்கலைக்கழகம் வேளாண்மையில் 10 இளம் அறிவியல் பட்டப்படிப்புகளை அளித்து வருகிறது.    இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது விண்ணப்பங்களை மாணவர்கள் இணைய தளம் மூலமாக அளித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று பல்கலைக்கழகம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புக்களுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  இதுவரை 45000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இணையம் மூலம் விண்ணப்பம் அளிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் எனப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இணையம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 17.09.2020 லிருந்து 05.10.2020 ஆக நீட்டிக்கபட்டுள்ள்து.  இதைப் போல் தரவரிசை பட்டியல் வெளியீட்டுத் தேதி 29.09.2020 லிருந்து 15.10.2020 ஆக மாற்றப்பட்டுள்ளது. : எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.