சென்னை

மிழக அரசு ஆன்லைன் மூலம் மருத்துவமனை படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிக்கு விண்ணப்பிக்க வசதி செய்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் இன்று 33,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,98,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 17,670 பேர் உயிர் இழந்து 13,61,204 பேர் குணம் அடைந்து தற்போது 2,19,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இதையொட்டி எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி உள்ளன எனத் தெரியாமல் கொரோனா நோயாளிகள் அலைய நேரிடுகிறது.  இதற்காக கொரோனா வார் ரூம் ஒன்றைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த கொரோனா வார் ரூம் சார்பில் ஒரு புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த இணைய தளத்தின் மூலம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் மருத்துவமனையில் படுக்கை, ஆக்சிஜன் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.