தேர்தல் நடத்த விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை:
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை சந்திக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை நண்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.