சென்னை

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் அளித்த ராஜினாமா ஏற்கப்பட்டு நான்குநேரி தொகுதி காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வசந்தகுமார் போட்டியிட்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார்.

வசந்தகுமார் ஏற்கனவே நான்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். ஒருவர் ஓரே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை ஆகிய இரு தொகுதிகள்லும் உறுப்பினராக இருக்க முடியாது என்பது சட்டமாகும். அதனால் வசந்தகுமார் தனது நான்குநேரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதை ஒட்டி தமிழக சட்டப்பேரவை செயலர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குநேரி தொகுதியை காலியான தொகுதியாக இன்று அறிவித்துள்ளார்.