சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கல்வித்துறை தடை விதித்து உள்ளது.

தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை விவாத கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஜூலை 30ந்தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள்  மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்து விவாதங்களும் ஒப்புதலும் பெறப்படும்.

அதன்படி   ஜூலை 2ல் கல்வி மானிய கோரிக்கை மீதான விவதாம் சட்ட பேரவையில் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு கல்வித்துறை  அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

. ஜூன் 29,30 மற்றும் ஜூலை 1 ல் மாவட்ட, முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவரும் 3 நாட்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.