நமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு

நமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா,ஜ,க,வின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜே.பி. நட்டா சென்னை வந்த போது அவர் முன்னிலையில், கட்சியில் சேர்ந்தார், நடிகை நமீதா.

அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் பா.ஜ.க.வில் சேர்ந்த நடிகர் ராதா ரவிக்கு, எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

பா.ஜ.க.வில் சேரும் முன்பாக ராதா ரவி, தி.மு.க.வில் இருந்தார். அப்போது நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ராதா ரவி பா.ஜ.க.வில் இணைந்தார்.

’’ கட்சியில் சேர்ந்து ஒருவர் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் மட்டுமே செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும். ஆனால் இப்போது புதிய வரவுகளுக்கு எல்லாம்  பெரிய பதவிகள் தாராளமாக வாரி வழங்கப்படுகின்றன’’ என்று முணுமுணுக்கிறார், பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்.

புதிய நிர்வாகிகள் நியமனத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் ஓரம் கட்டுப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்களில் செய்திகள் உலவுகின்றன.

-பா.பாரதி.