சென்னை:

காஷ்மீர் மாநில முன்னாள் ஓமர்அப்துல்லா குறித்து தமிழக பாஜகவின் கீழ்த்தரமான டிவிட் சமுக வலைதளங் களில் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது. மாநிலத்தின் முன்னாள் முதல்வரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த தமிழ்நாடு பாஜகவின் மனநிலையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த டிவிட்டை நீக்கி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியானது. எப்போதும் இளமையுடன் , கிளின் சேவ் செய்த நிலையில் சிரித்த முகத்துடன் காணப்படும் ஓமர் அப்துல்லா தாடி மீசையுடன்  இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூக வலை தளங்களிலும் வைரலானது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்  அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, தனது டிவிட்டர் பக்கத்தில், தாடியுடன் உள்ள ஓமர் அப்துல்லாவின் படத்துடன், உங்களைப் போனற்  ஊழல்வாதிகளில் பெரும்பாலோர் வெளியில் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது உங்களைப் இந்த நிலையில் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது,

எந்தவொரு உதவியும் ஏற்பட்டால், எங்கள் உண்மையான பங்களிப்பை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள், கூடுதல் உதவி  சம்பந்தமாக உங்கள் சகாவான அகில இந்திய காங்கிரஸ் கட்சியை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உளமார்ந்த பங்களிப்பை செய்வார்கள் என்று குறிப்பிட்டு, அதனுடன்  சேவ் செய்து கொள்ளும் ரேஷர் படத்தையும்  பதிவிட்டிருந்தது.

தமிழக பாஜகவின் இந்த டிவிட், சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சமூக வலை தளங்களில் ஏராளானோர், தமிழக பாஜககை வறுத்தெடுத்துவந்தனர். இந்த பதிவு தமிழக பாஜக நிர்வாகிகளின்  மோசமான மனநிலையை உணர்த்துவதாக விமர்சித்தனர். பாஜக மத்திய அமைச்சரான  கிரிராஜ் சிங்கும், தமிழக பாஜகவினரின் ஓமர் அப்துல்லா குறித்த விமர்சனம் படம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, ஓமர் அப்துல்லா குறித்த சர்ச்சைக்குரிய டிவிட்டை நீக்கி உள்ளது.