ஏப்ரல் 19 மற்றும் 29ம்தேதிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும்! தமிழக அரசு

சென்னை:

மிழகத்தில் 10ம்வகுப்பு தேர்வி வரும் 19 அன்றும்,  பிளஸ்2 தேர்வு முடிவு வரும் 29ந்தேதி வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ந்தேதி தொடங்கி, மார்ச் 19ம் தேதி முடிவடைந்தது. அதுபோல  10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போது தேர்வுதாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்து, மதிப்பெண்கள் கணினியில் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, முன்கூட்டியே தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் பள்ளி கல்வித்துறை முடித்து வருகிறது

இந்த நிலையில், வரும் 19ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவும் 29ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவ மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வில் வெற்றிபெறாதவர்கள், உடனடி  நடத்தப்படும் தட்கல் முறையிலான  தேர்வை மீண்டும் எழுதலாம் என்றும் இந்த தேர்வு 3 மற்றும் 10 ஜூன் இடையே நடைபெறும் என்றும்  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை  அறிவித்துள்ளது.

tnresults.nic.in. 

examresults.net.

Leave a Reply

Your email address will not be published.