இடைத்தேர்தல்: கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்

சென்னை:

மிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைகள் பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், 12 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை வந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி, திமுக, அதிமுகவை  தவிர டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் படுதோல்வி அடைவது உறுதியாகி உள்ளது.

கருணாநிதி – பூண்டி கலைவாணன்

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்:

திமுக – பூண்டி கலைவாணன்

அதிமுக –  ஜீவானந்தம்

அமமுக – எஸ்.காமராஜ்

நாம் தமிழர் – வினோதினி

மக்கள் நீதி மய்யம் – அருண் சிதம்பரம்‘

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் திருவாரூர் தொகுதியில் திமுக அமோக முன்னிலை வகித்து வருகிறது. மதியம் 12 மணி நிலவரப்படி சுமார் 9020 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை அடுத்து வரும் அதிமுக வேட்பாளர் ஜீவானந்ததை விட முன்னிலை பெற்று வருகிறார்.

பூண்டி கலைவாணன் 18971 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜீவானந்தம்  9951 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் திருவாரூர் தொகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்டு 68366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தன்னுடைய இறுதி சட்டமன்ற தேர்தலிலும் சாதனை புரிந்தார்.

அவரது மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.