தமிழக இடைதேர்தல்: பாஜக வேட்பாளர்கள் டெல்லியில் அறிவிப்பு!

சென்னை,

மிழக இடைதேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயர்கள் டெல்லியில் உள்ள பாரதியஜனதா தலைமை யகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

jpnadda

தமிழகத்தில் நடைபெற இருக்கும்  தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது.

இதன்படி அரவக்குறிச்சியில் எஸ்.பிரபு, தஞ்சாவூரில் என்.எஸ்.ராமலிங்கம், திருப்பரங் குன்றத்தில் சீனிவாசன் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என டெல்லி யில் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19ந் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் நடை பெற்றது. அப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதனால் அங்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் பதவி ஏற்கும் முன்னரே காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானது.

இதனையடுத்து இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை திமுக, அதிமுக, பாமக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதையடுத்து பாரதியஜனதாவும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது.

வழக்கமாக தமிழக பாரதியஜனதா தலைவர்கள்தான்  இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில்,  தற்போது டெல்லியில் இருந்து வேட்பாளர்கள் பெயர் அறிவித்து இருப்பது தமிழக பாரதிய ஜனதா தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed