இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது

சென்னை

ன்று அதாவது ஜூலை 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நேற்றுவரை மொத்தம் 1,42,798 பேர் பாதிக்கப்பட்டு 2032 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 92,667 பேர் குணம் அடைந்து 48199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழக அமைச்சர்களான செல்லூர் ராஜு,  தங்கமணி, அன்பழகன் உள்ளிடோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 ஆம் மாடியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.   இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 3 அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கத் தமிழக அரசு மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை,  சென்னை நகருக்கு அருகே சில புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி,   ஆன்லைன் மூலம் உயர்கல்வி மாணவர் சேர்க்கை,,  உள்ளிட்டவை குறித்து அமைச்சரவை ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி