ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகளை மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவு

சென்னை:

வரும் மே மாதத்தில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு .

அவ்வாறு ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15– ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புமாறு, தமிழக அரசின் வருவாய்த் துறை செயலருக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளூரில் பரிச்சயமானவராக இருப்பதால், பாரபட்சமாக நடக்கக்கூடும் என்ற காரணத்தால் இத்தகைய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதாக புகார் எழக்கூடும் என்பதாலும், தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை பணி மாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி