சென்னை:

17வது மக்களவை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்திருந்த நிலையில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. கடைசி கட்டமான 7வது கட்ட தேர்தல் நாளை மறுதினம் (19ந்தேதி) நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள்  மற்றும் பொதுமக்களும் வாக்கு எண்ணிக்கையையும், தேர்தலில் வெற்றிபெறப் போவது யார் என்பது குறித்தும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், 23ந்தேதி தமிழகத்தில் தேர்தல் முடிவு எப்போது வெளியாகும் என செய்தியாளர் கள் தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூவிடம் கேள்வி எழுப்பினர்.  அதற்கு அவர் பதில் மறுத்த நிலையில், அதுகுறித்து தற்போது ஏதும் கூற முடியாது என்று தெரிவித்து உள்ளார்.

பொதுவாக காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை 9 மணிக்கே முதல்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும். ஆனால், தேர்தல்ஆணையர் அதுபோன்று எந்த வொரு தகவலையும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

இந்த முறை வாக்கு எண்ணிக்கையுடன் விவிபேட் இயந்திரகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட இருப்பதால், வாக்கு எண்ணிக்கை வெளியிட தாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இந்த நிலையில் நிலையில், தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார்  தேர்தல்ஆணையர்.