திருப்பதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் சாமி தரிசனம்

சென்னை:

டைபெற்று முடிந்த 22தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக கைப்பற்றியதால், எடப்பாடியின் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்த நிலையில், திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

முன்னதாக நேற்று பிற்பகல் காரில் குடும்பத்தினருடன் திருமலை சென்ற முதல்வருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர். அதைத் தொடர்நது, இரவு அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகை தங்கினார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் தனது குடும்பத்தின ருடன் பங்கேற்று தரிசனம் செய்தார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, திருப்பதியில் இருந்து அவர் சென்னை புறப்பட்டார்.