தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை

லைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலராக பதவி வகிப்பவர் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கிரிஜா வைத்யநாதன்.    சமீபத்தில் முதலமைச்சர் இல்லத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு கிரிஜா வைத்யநாதன் வந்துள்ளார்.  அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.   அதனால் அவரது கால் எலும்பில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக கிரிஜா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு சிகிச்சை நடை பெறுகிறது.   அவர் பணிக்குத் திரும்பும் வரை அவருடைய பொறுப்பை நிதித்துறை அமைச்சர் சண்முகம் கவனிப்பார் என அரசு அறிக்கை தெரிவிக்கிறது.    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரிஜா வைத்யநாதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.