சென்னை

மிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் நாளை ஓய்வு பெறுகிறார்.

தமிழக அரசின் 46ஆம் தலைமைச் செயலராக க சண்முகம் பதவி வகித்து வருகிறார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி பதவி நியமனம் செய்யப்பட்ட சண்முகம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தவர் வாவர். இவர் கடந்த 1960 ஆம் அண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி  பிறந்தவர் ஆவார்.

சண்முகம் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வேளான்பட்டப்படிபு படித்தவர் ஆவார். அதன்  பிறகு சிவில் தேர்வு எழுதி ஐ ஏ எஸ் தேவில் வெற்றி பெற்று 1985 ஆம் வருடம் தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யபடார். இவர் முதலில் பயிற்சி துணை ஆட்சியராகத் தஞ்சையில் பணியாற்றி உள்ளார்.  அதன் பி|றகு நெல்லை சேரன் மாதேவியிலும் துணை ஆட்சியராக பணி புரிந்துள்ளார்.

அதற்குப் பிறகு வணிகவரி துணை ஆணையர், பட்டு வளர்ச்சி இயக்குநர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.  கடந்த 1995 முதல் 1998 வரை சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணி புரிந்துள்ளார்.  கடந்த 2001 ஆம் ஆண்டு வளர்ச்சித்துறை இயக்குநராக மாற்றப்பட்டு பிறகு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கத்தின் கீழ் நிதித்துறை செயலராகப் பணி ஆற்றினார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது நிதித்துறைச் செயலராக நியமிக்கப்பட்டு அதிமுக ஆட்சியிலும் நிதித்துறைச் செயலராகப் பணி ஆற்றினார்.  முந்தைய தலைமை செயலரான கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்ற பிறகு சண்முகம் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.   சென்ற வருடம் ஜூலை 31 ஆம் தேதி ஓய்வு பெற வேண்டிய சண்முகம் கொரோனா தொற்று பிரச்சினையை எதிர்கொள்ள பதவி நீட்டிப்பு செய்யப்பட்டார்.

அதன் பிறகு மீண்டும் ஒரு முறை பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட சண்முகத்துக்கு நாளை அதாவது ஜனவரி 31 அன்றுடன் பதவிக்காலம் முடிவடைகிறது.   அவருக்கு பிறகு 1985 ஆம் ஆண்டு பேட்ச் ஐ ஏ எஸ் அதிகாரியான ரஜீவ் ரஞ்சன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.  பணி மூப்பு அடிப்படையில் 1984 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான மீனாட்சி ராஜகோபால் முன்னிலையில் உள்ளார். அவர் பதவி ஒய்வு பெர இரு மாதங்கள் உள்ளதால் ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.