சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா உறுதியானது! ராஜீவ்காந்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் தகவல்…

சென்னை: கொரோனா அறிகுறி காரணமாக, நேற்று இரவு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 7,36,777 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 2,03,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரத்துறை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென  சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு காய்சசலுடன் சளி மற்றும் இருமல்  ஏற்பட்டது. இது மேலும் அதிகரித்ததால், கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், நேற்று மாலை,  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஏற்பட்ட அறிகுறி கொரோனா அறிகுறி என்றதுடன், உடனே அவரை சிகிச்சைகாக அனுமதிதனர். அவருக்கு உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஸ்கேன் உள்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதிக்க தனி டாக்டர்கள் குழு  அவருக்க தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இதை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தலைமை மருத்துவர் உறுதிசெய்துள்ளார்