சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவரது வீட்டிற்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார்.

கொரோனா தொற்று உச்சம் பெற்ற நாட்களிலிருந்தே மாதந்தோறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் புரோகித்தை சந்தித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

கடந்த மாதம் ஆளுநர் மாளிகையில் உள்ள பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆளுநருக்கும் கொரோனா தொற்று உறுதியாக, மருத்துவமனை பரிசோதனைக்கு பிறகு தனிமையில் இருந்தார். இந் நிலையில், தற்போது அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து உரிய விளக்கம் அளித்துள்ளார்.

பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு எடுத்து வரக்கூடிய தடுப்பு நடவடிக்கைகள்? வீரியத்தை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டம் தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் ஆளுநர் விளக்கியதாக தெரிகிறது.