சென்னை: திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளின் படி, தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து பல மாநிலங்கள் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்திலும் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. விரைவில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ரசிகர்களுடன் திரையரங்குகளில் அமர்ந்து நடிகர்கள் ஒரு படமாவது பார்க்க வேண்டும். திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் திரையிட விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.