தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை:தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இந் நிலையில் அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.