வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 3வது வாரத்தில் துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

நாளை காலை, தலைமை செயலகத்தில், அனைத்து துறை செயலர்களுடன் இந்த ஆலோசனை நடக்கிறது. நீர் நிலைகள், மழை நீர் கால்வாய்கள் உள்ளிட்டவற்றை துார் வாருவது, கால்வாய்களில் அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்கப்படுகிறது.

கொரோனா காலம் என்பதால், மழைநீர் தேங்கும் பகுதிகளில்  வெளியேற்றப்படும் மக்களை, தங்க வைக்க கூடுதல் முகாம்களை ஏற்படுத்துவது குறித்தும், ஆலோசிக்கப்பட இருக்கிறது.

You may have missed