சென்னை:

மிழக காவல்துறைக்கு ரூ.96 கோடி மதிப்பீட்டிலான  2,271 போலீஸ் வாகனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ( 27.6.2018 ) நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது,  காவல்துறை யினரின் பயன்பாட்டிற்காக  பல்வேறு வகையான வாகனங்கள் வாங்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, தற்போது ரூ. 95 கோடியே  58 லட்சத்து 31 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பீட்டிலான  2,271 போலீஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரத்து 775 ரூபாய் செலவில் 31 ஸ்கார்பியோ வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அந்த வகையில், காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக மொத்தம் 95 கோடியே 58 லட்சத்து 31 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பீட்டிலான 2,271 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, மோட்டார் சைக்கிள்கள், ஜீப்புகள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட 41 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.கா. விஸ்வநாதன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையகம்) சீமா அக்ரவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.