சென்னை:

மிழகத்திலுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று 2வது நாளாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்நாளான நேற்று 16 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மீதமுள்ள 13 மாவட்ட கலெக்டர்களுடன்  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று 2-வது நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்பட 13 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய கூட்டத்தில், மழை வெள்ளம் மீட்பு பணி காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கலெக்டர்களுடன் பேசிய முதல்வர்,  தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச் சேர கலெக்டர்கள் பணியாற்ற  வேண்டும் என்றும் துறை ரீதியாக திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும்உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் படியும்  மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட சில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.