ரூ.69 கோடி மதிப்பிலான போலீஸ் குடியிருப்புகள், காவல்துறை கட்டிடங்கள்: எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை, செப்.19:

ரூ.69 கோடி மதிப்பிலான போலீஸ் குடியிருப்புகள், காவல்துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து,, சென்னை, மைலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் 37 கோடியே 94 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 காவலர் குடியிருப்பு களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 31 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 162 காவலர் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 2 காவல்துறை இதர கட்டடங்கள், 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இதன் காரணமாக மொத்தம் 69 கோடியே 49 லட்சத்து 70ஆயிரம் அளவிலான திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை, மைலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் 37 கோடியே 94 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 1 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 காவலர் குடியிருப்புகள், ராயபுரத்தில் 3 கோடியே 88 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 28 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் – மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ம் அணிக்காக 11 கோடியே 7 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 118 காவலர் குடியிருப்புகள்;

சென்னை – கண்ணகி நகர், காஞ்சிபுரம் மாவட்டம் – மாங்காடு மற்றும் கானத்தூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள்;

சென்னை, அசோக் நகர், காவல் பயிற்சி பள்ளியில் 5 கோடியே 67 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் 2 கோடியே 27 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயுதக்கிடங்கு;

திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி மற்றும் வேலூர் மாவட்டம்- அரக்கோணத்தில் 1 கோடியே 78 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள்;

வேலூர் மாவட்டம் – ஆலங்காயத்தில் 1 கோடியே 72 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள்;

என மொத்தம், 69 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.வி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தற்போது மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின்கீழ் திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா. காமராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மு. சுதா தேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ஆர். கண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.