மாணவர்களுக்கு சமுதாய உணர்வுகளை கற்பித்து சிறந்து பணியாற்றிடுக: ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும். சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்க ஒன்றாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed