சென்னை

மிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்  ஏற்பட்டதற்குத் தமிழக முதல்வர் ரூ.54.48 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்துள்ளார்.

தமிழகத்தில் நாமக்கல்,  ஈரோடு. சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டஙக்ளில் சுமர் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது.  இந்த பயிரில் மரப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது  தற்போது கோடைக்காலம் என்பதால் இந்த பூச்சிகள் அதிக அளவில் பரவி உள்ளன. இதற்குத் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு :

 “தமிழகத்தில் நாமக்கல் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிரை மாவுப் பூச்சிகள் தாக்கி வருகின்றன.  ஆப்ரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை உண்டாகும் இப்பூச்சிகள் நடவுக் குச்சி மூலம் பரவி கோடைக் காலம் என்பதால் அதிக அளவில் பாதிப்பைஏறப்டுத்டி உள்ளது.

எனது உத்தரவின் பேரில் தோட்டக்கலை விரிவாக்க பணியாளர்கள் 27/05/2020 அன்று ஆய்வு செய்தனர்.  இந்த பூச்சி பயிரின் அனைத்து  பகுதிகளில் இருந்தும் ஈரத்தை உறிஞ்சுவதால் பயிர்கள் நாசமாகி கிழங்கு உற்பத்தி பாதிப்பு அடைகின்றன   இந்த பாதிப்பைக் குறைக்கப் பல ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற விவசாயிகள் பயிற்சி பெற வேண்டும்.

மரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த நடவு முடிந்த இரண்டாம் மாதத்தில் மருந்துகள் தெளிக்க ஹெக்டேருக்கு ரூ , 1750 வீதம் 3112 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்கள் பாதுகாப்புப் பணிக்காக நான் ரூ.54,48,000 நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என அறிவித்துள்ளார்.