கொரோனா : தமிழக முதல்வர் அலுவலக தனிச் செயலர் உயிர் இழப்பு

சென்னை

கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

சென்னையில் 40000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதல்வர் அலுவலக ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியில் அலுவலக தனிச் செயலர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.  கொரோனா தாக்கம் காரணமாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.