உலகின் மிக பழமையான மொழியான தமிழை மற்ற மாநிலங்களிலும் விருப்ப மொழியாக்க வேண்டும்!  மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை:

லகின் மிக பழமையான மொழிகளில் ஒன்றான  தமிழ் மொழியை மற்ற மாநிலங்களிலும் விருப்ப மொழியாக்க பயிற்று விக்க வேண்டும் பிரதமர்  மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக புதிய அமைச்சரவை பதவி ஏற்றதும், தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. அதில், மாநில மொழியுடன் ஆங்கிலம், இந்தி கட்டாயம் என மும்மொழி கொள்கை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதால்,  மும்மொழிக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியை மத்தியஅரசு திணிக்க முயற்சிப்ப தாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தி விருப்பமொழியாக மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்- பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகின் மிக பழமையான மொழிகளில் ஒன்றான  தமிழ் மொழியை மற்ற மாநிலங்களிலும் விருப்ப மொழியாக பயிற்று விக்க வேண்டும்,  இது உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: PM narendramodi ji, Tamil as an optional language, TN cm palanisamy
-=-