இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

--

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இதுவரை 3550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக திகழ்ந்ததுதெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் ஊரடங்கில் இருந்துபல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூடி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில், இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்   மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து,  இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி. உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.