திங்கள்கிழமை அன்று மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை

சென்னையில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் திங்கள் கிழமை அன்று மருத்துவ  நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.  இதுவரை சென்னையில் 28924 பேர் பாதிக்கப்பட்டு 291 பேர் உயிர் இழந்துள்ளனர். இது மொத்த தமிழக பாதிப்பில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு ஆகும்.

தமிழகத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கையான 367 இல் சென்னையில் மட்டும் இதுவரை 291 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,723 பேர் குணமடைந்துள்ளனர்.  நேற்று வரை 18,284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 தமிழக அரசு இதைக் கட்டுப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருகிறது.  இதையொட்டி வரும் 15 ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை தமிழக முதல்வர் பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

 இந்த கூட்டத்தில் முதல்வர் சென்னையில் ஊரடங்கைக் கடுமையாக்குவது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.