பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் ‘காபி-டேபிள்’ புக்கை தமிழக முதல்வர் வெளியிட முதல் பிரதியை தல ’தோனி’ பெறுகிறார்!

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவரும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சீனிவாசனின் 50 ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் ‘காபி-டேபிள் புக்’ என்ற புத்தகம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியிடப்படுகிறது. இதன் முதல் பிரதியை இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனி பெறுகிறார்.

coffee

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் 50 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் ‘ காபி-டேபிள் புக் ‘ என்ற புத்தகத்தை சீனிவாசன் வெளியிடுகிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகத்தை வெளியிடுகிறார்.

இதன் முதல் பிரதியை முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பெறுகிறார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன்களான சாந்து பார்டே, கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இவர்களைத் தவிர, குண்டப்ப விஸ்வநாத், திலீப் வெங்சர்கர், ஸ்ரீகாந்த், அனில் கும்ப்ளே, டிராவிட், லட்சுமண், ஹர்பஜன் சிங், காம்பிர், யுவராஜ் சிங், யாஷ்பால் சர்மா, சையது கிர்மானி, ஜவஹல் ஸ்ரீநாத், சேவக், தமிழக கிரிக்கெட் வீரர்களான தினேஷ் கார்த்திக், ராஜகோபால், பெல்லியப்பா, லட்சுமிபதி பாலாஜி, பத்ரிநாத், ஹேமங் பதானி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அம்பதி ராயுடு உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் போர்டில் பல்வேறு முன்னணி மாற்றங்களை கொண்டு வந்ததில் சீனிவாசனுக்கு முக்கியபங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.