முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா பரிசோதனை… அமைச்சர் தகவல்…

சென்னை:
மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில், அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபா1கர், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358  பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 34,112 பேர்  குணமடைந்து இருப்பதாகவும்,  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது. மக்களிடம் பதற்றம் வேண்டாம், அதே சமயம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும்,  கொரோனா முழுமையாக கட்டுப்படுத்துவது கடவுளுக்கு தான் தெரியும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியது எதார்த்தமானதுதான் என்று கூறியவர்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனை முடிவில், அவருக்கு கொரோனாதொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது எனறும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.