தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்!

--

 

1tech_aaexam

தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.

தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பும்; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வையும் எழுதுகின்றனர்.

இந்த விடைத்தாள்களை திருத்த குறைந்தது 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

தற்போது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கூலி மேலும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் நிறைய குளறுபடிகள், மதிப்பெண்கள்  குறைவு, மறுகூட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, நீதிமன்றம் வரை செல்கிறது.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்துவிடுபட, விடைத்தாள்களை கம்யூட்டர் கொண்டு திருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சிபிஎஸ்சி, மற்றும் தேசிய அளவிலான நுழைவுதேர்வு விடைத்தாள்கள் கம்ப்யூட்டர் வாயிலாகவே திருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

இதுகுறித்து, கல்வி அதிகாரி கூறியது: முதற்கட்டமாக, பத்தாம் வகுப்பு விடைத்தாளை மட்டும் புதிய நடைமுறையில் திருத்த ஆலோசிக்கப்படுகிறது. . இதன்படி, வினாத்தாள் பக்கம் வாரியாக, ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, தனி, ‘போல்டர்’ ஏற்படுத்தப்படும். திருத்தும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக, ‘யூசர்நேம், பாஸ்வேர்டு’ வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்தபடியே மதிப்பீடு செய்யலாம். அதற்கான, ‘ஆன்சர் கீ’ யும், ‘அப்லோடு’ செய்யப்படும்.

இப்பணிக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் ஆசிரியர் தேவை இருக்கும். வீட்டில் இருந்தே, கணினி மூலம் மதிப்பீடு செய்யலாம். இதற்கு ஏற்ப, வினாத்தாள் மற்றும் வினாக்களில் சில மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், மதிப்பீடு துல்லியமாக இருக்கும். மறுகூட்டலில் மதிப்பெண் வித்தியாசம் போன்ற பிரச்னை ஏற்பாடாது. விடைத்தாள் தேவைப்படும் மாணவர் களுக்கு, ‘ஆன்லைன்’ மூலமே விடைத்தாள் பக்கங்களை அனுப்பி வைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.