சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர்: பணியிடை நீக்கம்

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை முகநூலில் விமர்சித்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து. இவர் முகநூல் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதால்  சதீஷ் முத்துவை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் தமது முகநூல் முகவரி, பாஸ்வேர்டை கொடுத்து நண்பர்கள் மூலம் கருத்து பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.