சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை: போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த கேரள பத்திரிகையாளர்கள் கைது

சென்னை:

சேலம் சென்னை  எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிரான மக்கள்  போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த கேரள பத்திரிகை யாளர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குறித்து ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் கூறிய நிலையில், சேலம் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிராக மக்களின் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்றை  மலையாள டி.வி. சேனலான மாத்ருபூமி  செய்தியாளர்  அனூப் தாஸ், சேனலின் தயாரிப்பாளர் முருகன், தமிழ் செய்தித்தாளான தீக்கதிரின் நிருபர் ராமதாஸ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னை சேலம் சாலைக்கு எதிராக 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை சேலம்  எக்ஸ்பிரஸ்வேக்கு எதிராக குரல் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களை கண்மூடித்தனமாக அடித்து கைதுசெய்த தமிழ்நாடு காவல்துறை, இதுகுறித்து செய்தி சேகரித்த இரண்டு செய்தியாளர்கள் மற்றும் ஒரு காமிரா மேன் திருவண்ணமலை காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செயய்யப்பட்டுள்ள கேரள பத்திரிகையாளர்கள்

இப்போது அவர்களது நடவடிக்கைகளை ஒரு படி மேலே எடுத்துள்ளது. திருவண்ணாமலையில் இரண்டு செய்தியாளர்கள்  மற்றும் ஒரு கேமராமேன் மற்றும  அவர்களுடன்  திருவண்ணாமலை மாவட்ட சிஐடியு துணைத் தலைவர் ஆனந்தன் வசுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை  திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிற்பகல் 3 மணி வரை அவர்களை வெளியேவிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கைது செய்யப்பட்ட மலையாள செய்தி சேனலின் செய்தியாளரான  அனுப் இதுகுறித்து வீடியோ மூலம் தகவல் தெரிவித்து உள்ளார்.  அதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அனுப் வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிரான மக்கள்  போராட்டத்தை மூடி மறைக்கும் நோக்கில் தாங்கள் கைது செய்யப்பட்டதாகவும், எங்களை  காரை எடுத்து செல்ல காவல்துறையினர் எங்களை அனுமதிக்க வில்லை என்றும்,  ஏன் எங்களை கைது செய்துள்ளனர் என்பதற்கான எந்தவொரு காரணமும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார். மேலும், எங்களை அழைத்த காவல்துறையினர், தங்களது சக்தியை பிரயோகித்து  கைது செய்தனர் என்று வீடியோவில் அனூப் குற்றஞ்சாட்டினார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தோம், ஆனால் அவர்கள் வரமுடியாது என்று கூறினர். அவர்கள் கேரளாவை சேர்ந்த  பத்திரிகையாளர்கள் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேரள சேனல் நிர்வாகம், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் புகார் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளது.