தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில்  கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக இருந்தது 77 அதிகரித்து 911 ஆகி உள்ளது.

தமிழக அரசு மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம் வெளியிட்டுள்ளது.

* சென்னை – 172

* கோவை – 86

* திண்டுக்கல் – 54

* திருநெல்வேலி – 56

* ஈரோடு – 60

* திருச்சி – 36

* நாமக்கல் – 41

* ராணிப்பேட்டை – 36

* தேனி – 40

* கரூர் – 23

* செங்கல்பட்டு – 40

* மதுரை – 25

* விழுப்புரம் – 23

* திருவாரூர் – 13

* சேலம் – 14

* திருவள்ளூர் – 13

* விருதுநகர் – 11

* தூத்துக்குடி – 24

* நாகப்பட்டினம் – 12

* திருப்பத்தூர் – 16

* கடலூர் – 14

* திருவண்ணாமலை – 10

* கன்னியாகுமரி – 15

* சிவகங்கை – 06

* வேலூர்  – 11

* தஞ்சாவூர் – 11

* காஞ்சிபுரம் – 06

* நீலகிரி – 07

* திருப்பூர் – 26

* ராமநாதபுரம் – 02

* கள்ளக்குறிச்சி – 03

* பெரம்பலூர் – 01

* அரியலூர் – 01

* தென்காசி – 03

* இதுவரை புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.